×

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அங்கீகரிக்கப்படாத படிப்புகளை அளித்தால் உடனே நடவடிக்கை: யு.ஜி.சிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகுல் மகாஜன் என்பவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை வழங்குவதை யு.ஜி.சி தடுக்க இயலாததாக உள்ளது என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி தரமாகவும், அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகவும் இருப்பதை யு.சி.ஜி கண்காணிக்க வேண்டும். கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் அளிக்கப்படும் பட்டப்படிப்புகள் உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். அது குறித்து கல்லூரிகளுக்கு எழுத்து மூலமாகவும், தனது இணைய தளம் மூலமாகவும் தக்க வழிகாட்டுதல்களை யு.சி.ஜி அளிக்க வேண்டும். அதன்படி நடக்காத கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீது 1956ம் ஆண்டு யு.சி.ஜி சட்டப்பிரிவு 24ன் கீழ் அபராதம் விதிக்க யு.சி.ஜி முழுமையான அங்கீகாரம் பெற்றுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

The post பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அங்கீகரிக்கப்படாத படிப்புகளை அளித்தால் உடனே நடவடிக்கை: யு.ஜி.சிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,UGC ,New Delhi ,Rahul Mahajan ,Dinakaran ,
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...